Read more...
தமிழ் இன்று
9.12.10
என்னைத் தேசத் துரோகி என்று அறிவியுங்கள் - பாரதப் பிரதமருக்கு ஒரு கடிதம்
படம்: நன்றி: விக்கிபிடியா
ஆசை
இந்த நாட்டிலே மிகவும் சக்தியற்றவர்களுள் ஒருவனாகிய நான் என்னை விடவும் சக்தியற்ற பிரதமர் அவர்களுக்கு எழுதும் கடிதம். 'மதிப்புக்குரிய பாரதப் பிரதமர்' அவர்களுக்கு, 'மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு' என்றெல்லாம்தான் இந்தக் கடிதத்தை நான் துவங்க விரும்பினேன். ஆனால், உங்களுக்கு மதிப்போ மாண்போ உண்மையில் இருப்பதாக நீங்களே நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

பெருநட்சத்திர வெடிப்பும் இவான்ஸின் பிரபஞ்சமும்
படம்: நன்றி: நாசா
கிருபானந்தம்
ஒரு மனிதர் இருப்பார்; நம்மால் ஒரு நாள்கூட செய்ய முடியாத காரியத்தை, பார்ப்பதற்கு அலுப்பூட்டுவது போன்றும் எந்தப் பயனும் இல்லாதது போன்றும் நமக்குத் தோன்றும் ஒரு காரியத்தை அவர் தனது வாழ்நாள் முழுக்கச் செய்துகொண்டிருப்பார். அப்புறம் தள்ளி நின்று வரலாற்றில் அவரைப் பற்றிப் படிக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கும். எப்பேர்பட்ட ஒரு அற்புதமான செயலை அவர் செய்திருக்கிறார் என்று நாம் சொல்லிக்கொள்வோம். இப்படிப்பட்ட மனிதர்களை வரலாறு நெடுகிலும் காண முடியும். ஆனால் நம் காலத்தில் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்று நமக்குத் தெரியாது. உண்மை என்னவென்றால் அப்படிப்பட்டவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்; தன் வாழ்நாள் முழுவதும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி ஐந்து பாகமாக வெளியிட்ட ஜோசஃப் ஃபிராங்க், ஒற்றை வைக்கோல் புரட்சியால் புகழ்பெற்ற மசானபு புக்காகோ மற்றும் தன் வாழ்நாளின் பெரும்பாலான இரவுகளை பெருநட்சத்திர வெடிப்புகளை (பெருநட்சத்திர வெடிப்பு-supernova) கண்டறிவதற்காகச் செலவிட்டிருக்கும் ராபர்ட் ஓவன் இவான்ஸ் போன்றோரைச் சொல்லலாம்.

ஆசிரியர் இல்லாத வரலாற்றுச் சுவடுகள்
ரோஜா
ஒரு சமூகம் வரலாற்றை எப்படி அணுகுகிறது என்பதற்கான சமீபத்திய உதாரணம் தமிழகத்தின் மிகப் பெரிய பத்திரிகையான 'தினந்தந்தி'யின் 'வரலாற்றுச் சுவடுகள்'. சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் மு. கருணாநிதியின் கரங்களால் வெளியிடப்பட்ட இந்த நூல் 'தினத்தந்தி'யில் பல மாதங்கள் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். நல்ல தாளில் வண்ணத்தில் அச்சிட்டு கெட்டி அட்டைக் கட்டுடன் நல்ல தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 375. இந்த விலையில் இப்படிப்பட்ட தயாரிப்பில் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் வேறு எந்தப் பதிப்பாளராலும் இப்படியொரு புத்தகத்தை வெளியிட முடியாது.

கார்த்திக் நேத்தா கவிதைகள்
ஓவியம் : நன்றி: ஷாந்தே யங்
மழை வளர்ப்பு
ஒவ்வொரு மழையும்
ஒவ்வொரு மீனென்று
சொன்னதிலிருந்து
கிடைக்கின்ற மீன்களை
தண்ணீரில் விட்டு வளர்க்கிறாள்
என் மகள்
மழையும் நீந்தும் என்பதை
நான் உணர்ந்த வயதில்
என் மகள் வளர்ந்துவிட்டாள்
மழையும் மீனும்
இன்னும் உள்ளன
நானும் என் மகளும்
ஏன் வளர்ந்தோம் ?
காமம் காமம் என்ப... (சங்கத்தில் பாடாத கவிதை)
ஓவியம்: நன்றி: ஜூலியா வாட்கின்ஸ்
ஆசை
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான, (பரத்தையுடனான உறவு தவிர) பெரும்பாலும் முறையாகக் கருதப்பட்ட காதல் உறவையே சங்க இலக்கியத்தின் அகத்துறைப் பாடல்கள் முன்னிறுத்தியிருக்கின்றன என்று நான் அறிகிறேன். பெண்களுக்கு இடையேயான ஒருபால் உறவு, ஆண்களுக்கிடையேயான ஒருபால் உறவு, இருபால் உறவு போன்றவை சங்க இலக்கியத்தில் இல்லவே இல்லை. காலங்காலமாக இருக்கும் இதுபோன்ற உறவுகள் தமிழ் இலக்கியத்தில் இப்போதுதான் சிறிய அளவில் எட்டிப்பார்க்கின்றன. சங்கப் பாடல்களின் சாயலை எடுத்துக்கொண்டு இதுபோன்ற விஷயங்களையும் பாலியல் பிறழ்வுகளாகக் கருதப்படும் இன்னும் சில விஷயங்களையும் கருவாகக் கொண்டு பாடல்கள் எழுதினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அதன் விளைவுதான் பின்வரும் பாடல்கள்.

Categories :
முதல்-வரை எப்படி எழுத வேண்டும்?
-கே. சிவராமகிருஷ்ணன், மலேசியா.
இது ஒரு நல்ல கேள்வி. கிட்டதட்ட எல்லோருமே தவறாக எழுதும் இரு சொற்கள் இவை. முதல் என்கிற வார்த்தையை தொடங்கி என்கிற பொருளிலும் வரை என்கிற வார்த்தையை முடிய என்ற பொருளிலும் பயன்படுத்தும்போது முன் உள்ள சொல்லுடன் சேர்த்தே எழுத வேண்டும்.
உதாரணம்: நேருமுதல் ராகுல்வரை..., சென்னைமுதல் குமரிவரை...
- சீத்தலைச்சாத்தனார்

27.11.10
மாத மலராகிறது தமிழ் இன்று
அன்புமிக்க வாசகர்களுக்கு, வணக்கம். ஒரு முக்கியமான முடிவை 'தமிழ் இன்று' குழுவினர் எடுத்திருக்கிறோம். இந்த முடிவின்படி, 'தமிழ் இன்று' இனி மாதந்தோறும் பதிவேற்றப்படும் வலைப்பூவாக மாறுகிறது. நாளாக நாளாக 'தமிழ் இன்று' வளர்வதற்குப் பதிலாக தேய ஆரம்பித்ததை உணர்ந்து, ஆழ்ந்த சுயபரிசீலனைக்குப் பிறகு நாங்கள் எடுத்திருக்கும் முடிவு இது. இந்தத் தருணத்தில் எங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு அளித்துவரும் வாசகர்களாகிய உங்களிடத்தில் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்வது எங்களுடைய கடமை எனக் கருதுகிறோம்.
பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஒரு சின்ன நண்பர் குழாமின் எழுத்து முயற்சியாகவே 'தமிழ் இன்று' தொடங்கப்பட்டது. எதிர்வினைகளைக் குறித்து
பொருட்படுத்தாமல் எந்தவொரு விஷயத்திலும் நிதர்சனமான கருத்துகளைத் துணிச்சலாக வெளியிடுவதையே தமக்கான பாணியாக 'தமிழ் இன்று' கொண்டது. இந்த ஏழு மாத காலத்தில் சொல்லத் தக்க தீவிரமான வாசகர்களை (எண்ணிக்கை அளவில் குறைவு என்றாலும்) 'தமிழ் இன்று' பெற்றிருக்கிறது. எழுத்தாளர்களாலும் பத்திரிகையாளர்களாலும் தொடர்ந்து அது கவனிக்கப்படுகிறது. தமிழின் முன்னணி தீவிர இலக்கிய இதழான 'காலச்சுவடு', 'தமிழ் இன்'றில் வெளியான கட்டுரைகளை மறுபிரசுரம் செய்ததும் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான 'தினமணி', 'தமிழ் இன்'றைப்போல பிழையின்றித் தமிழில் எழுத ஆலோசனை தரும் தனித் தொடரை வெளியிடத் தொங்கியதும் குறுகிய காலத்தில் 'தமிழ் இன்று' ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களுக்கான சான்றுகள்.
ஆனால், தொடக்கத்தில் வந்த தரம் இன்று 'தமிழ் இன்'றில் இல்லை. படிக்கும்போதே சுணக்கம் தெரிகிறது. பிழைகள் நிறைய மலிந்திருக்கின்றன. ஆமாம். இப்போது முன்மாதிரி இல்லை. வாசகர்கள் அவதானித்ததை நாங்களும் உணர்கிறோம். எங்களை சுயபரிசீலனைக்குட்படுத்திக்கொள்கிறோம். தவறு புரிகிறது. என்ன காரணம்?
அடிப்படையில் இந்த வலைப்பூ எந்தவொரு தனி மனிதரையோ அல்லது நிறுவனத்தையோ சார்ந்தது அல்ல. சுயேச்சையான ஓர் அமைப்பு. இந்தப் பலமே பலகீனமாகிவிட்டது. முன்புபோல அல்லாமல் இப்போது 'தமிழ் இன்று' நண்பர்கள் குழாம் விரிவடைந்துவிட்டது. நாளை நீங்கள் ஒரு நல்ல கட்டுரையை அனுப்பினால் நீங்களும் 'தமிழ் இன்று'தான் என்கிற சூழல். ஆனால், இதற்கென ஒரு பொறுப்பாளர் இல்லை. கட்டுரைகளைக் கேட்டு வாங்க, ஒருங்கிணைக்க, தொகுத்தளிக்க. அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் நண்பர்களைக் கொண்டு இயங்குகிறோம். சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் வகையில் அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு வேறு. ஆக, சில சமயங்களில் எல்லோருக்கும் அவரவர் வேலை முக்கியமாகிவிட்டால் இதைக் கவனிக்க யாருமே இல்லாமல் போய்விடுகிறது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வாரந்தோறும் தவறாமல் வந்துவிடுகிறதே... ஆதலால், அவசரத்துக்கு எழுதி ஒப்பேற்றுவதே வேலை ஆயிற்று. மன்னியுங்கள், இந்தத் தவறுக்காக வருந்துகிறோம். இனி, இந்தத் தவறு நிகழாது.
புதிய முடிவின்படி இனி மாதந்தோறும் 10-ம் தேதி 'தமிழ் இன்'றில் பதிவேற்றப்படும். மாதந்தோறும் இனி அந்தந்த காலகட்டத்தின் பிரச்சினைகளைப் பேசும் ஒரு தலையங்கக் கட்டுரை, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு புத்தக அறிமுகம் அல்லது விமர்சனம், கதை அல்லது கவிதைகள் மற்றும் அறிந்துகொள்வோம் நமது மொழியை ஆகியவை கட்டாயம் இடம்பெறும். கூடுதலாக, மாதம் ஒரு சிறப்பு விருந்தினரின் சிறப்புப் பதிவும் இடம் பெறும். முக்கியமாக, தரத்தில் சமரசம் இருக்காது. உறுதி அளிக்கிறோம். ஆக, அடுத்த மலர் டிச. 10 -ம் தேதி வெளியாகும்; புதிய வடிவில், புதிய பதிவுகளுடன். வழக்கம்போல ஆதரவு அளிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.

20.11.10
இது முக்கியமான ஒரு விஷயம்...
![]() |
| ஆசை, புகைப்படம்: குமரேஷ் |
இது முக்கியமான ஒரு விஷயம்.
இப்படி இந்தக் கட்டுரையைத் தொடங்குவதில் ஏதேனும் நோக்கம் இருக்கிறதா? இருக்கிறது. இப்போதெல்லாம் நம்மாட்களுக்கு ஒரு விஷயம் முக்கியமானதாகப் பட வேண்டும் என்றால், அது மயிர்க்கூச்செரியக் கூடிய வகையில் எழுதப்பட்டிருக்க வேண்டி இருக்கிறது. பல கோடிகள் சம்பந்தப்பட்டதாகவோ பல உயிர்கள் சம்பந்தப்பட்டதாகவோ இருக்க வேண்டி இருக்கிறது. இந்த விஷயம் அப்படிப்பட்டதல்ல. ஆதலால், இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கு உணர்த்த இப்படியோர் அபத்தமான வரியிலிருந்து நான் தொடங்குகிறேன். இது முக்கியமான விஷயம்...
நானும் என் கொண்டலாத்தியும்
Categories :
ஆசை
பறவைகள் மீதான எனது ஈடுபாடு சிறிது காலத்துக்கு முன்தான் ஆரம்பித்தது. இருபத்தைந்து வயது வரை எனது பிரக்ஞையில் பறவைகளுக்குப் பெரிய இடம் இருக்கவில்லை. எல்லாரையும் போலவே அப்போது எனக்கும் காகம், பருந்து, கிளி, மயில் போன்ற ஒரு சில பறவைகள் மட்டுமே தெரியும்; அவ்வளவுதான். என்னைப் பறவைகள் உலகத்தை நோக்கித் திருப்பியது என் நண்பரும் விரிவாக்கப்பட்ட 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'யின் ஆசிரியருமான எஸ். ராமகிருஷ்ணன்தான். அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று என்னிடம் கேட்பார்: ''ஒரு குக்குறுவான் கத்துறது கேக்குதா?''. நான் காதை எவ்வளவோ கூர்தீட்டிக்கொண்டு கேட்டாலும் எனக்கு அந்தச் சத்தம் கேட்கவே கேட்காது; அப்புறம் அலுவலகத்தின் வாயில்புறத்திலுள்ள அடர்ந்த பூச்செடியைக் காட்டி ''அதோ ஒரு தேன்சிட்டு!'' என்பார்; நான் எவ்வளவோ தேடிப்பார்த்தும் அது எனக்குத் தெரியாது. பிறகுதான் தெரிந்துகொண்டேன். பறவைகளை அணுக பார்வையும் கேட்புத் திறனும் மட்டும் போதாது; நுண்ணுணர்வும் வேண்டும் என்று.

பறவைகளைப் பார்த்தல்: என் அனுபவங்கள்
Categories :
படம்: கே. ஞானஸ்கந்தன்
ஆசை
நான் ஒரு பறவையியலாளன் அல்ல; பறவைகளைப் பார்ப்பவன் அவ்வளவே. மன்னார்குடியில் என்னுடைய வீட்டருகில் நீங்கள் பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால், விசேஷமாக ஏதும் செய்யத் தேவையில்லை. மொட்டை மாடியில் போய் நின்றுகொண்டால் ஒரு மணி நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளைப் பார்க்கலாம். எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்க்கக் கிடைக்கும் பறவைகள்: காகம், மைனா, தேன்சிட்டு, தையல்சிட்டு, தவிட்டுக்குருவி (கல்லுக்குருவி என்றும் சொல்வார்கள்), கொண்டைக்குருவி, பருந்து, சோலைப்பாடி, வாலாட்டி, கொண்டலாத்தி, குக்குறுவான், மணிப்புறா, குயில், கரிச்சான், சிட்டுக்குருவி, மரங்கொத்தி போன்றவை. வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் குளத்துக்குப் போய்ப் பார்த்தால் சிறகி, நீளவால் இலைக்கோழி, நீர்க்காகம் போன்ற பறவைகளைப் பார்க்க முடியும். அப்படியே வயல்வெளி, புதர்களூடே நடந்துசென்றால் செம்பகம், பஞ்சுருட்டான், ஆள்காட்டி, கொக்கு, மடையான் போன்ற எண்ணற்ற பறவைகளைக் காணலாம்.
இப்படிப் பறவைகளைக் காண்பது எதற்காக என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் பறவைகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் நாட்களெல்லாம் எனது படைப்புத் திறன் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டதையும் அந்த நாட்களில் மனதில் இனிமையான உணர்ச்சி நிலவியதையும் என்னால் உணர முடிகிறது. பறவைகளைப் பார்ப்பவர்கள் பலரும் குறிப்பேடு வைத்துக் குறித்துக்கொள்வார்கள். நான் அப்படிச் செய்வதில்லை, எனது குறிப்பேடு மனதுதான், எனது குறிப்புகள் கவிதைகள்தான்.

கார்த்திக் நேத்தா - மூன்று கவிதைகள்
வெளியொரு திணை
இறகிற்கு
பறக்கக் கற்றுத்தருகிறது
காற்று
மீனுக்கு
நீந்தக் கற்றுத்தருகிறது
நீர்
எனக்கு வாழக் கற்றுத்தருகிறது
வலி
பறவை இல்லாமல் பறக்கிறது
இறகு
நீர் இல்லாமல்
மீனும்
வலி இல்லாமல்
நானும்
இறந்துபோகிறோம்
உயர உயர பறந்து
உயர்திணை யானென
எழுதி எழுதி தெளிகிறது
இறகு.
Read more...
இறகிற்கு
பறக்கக் கற்றுத்தருகிறது
காற்று
மீனுக்கு
நீந்தக் கற்றுத்தருகிறது
நீர்
எனக்கு வாழக் கற்றுத்தருகிறது
வலி
பறவை இல்லாமல் பறக்கிறது
இறகு
நீர் இல்லாமல்
மீனும்
வலி இல்லாமல்
நானும்
இறந்துபோகிறோம்
உயர உயர பறந்து
உயர்திணை யானென
எழுதி எழுதி தெளிகிறது
இறகு.
13.11.10
மீண்டும் புலிகளா? முட்டாளா நீங்கள்?
சந்தர் டி ராஜ்
நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரி கிடையாது. அதே சமயம் நண்பன் என்றும் கூற மாட்டேன். ஒரு மகத்தான போராட்டம் சீரழிந்து ஓர் இனமே அகதியானதற்கு நானும் ஒரு மௌன சாட்சி. இப்போது யோசித்துப் பார்க்கும்போது என்னுடைய தவறும் தெரிகிறது. சாகசத்தை நம்புபவர்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. நாம் அதீதமாக எதிர்பார்த்தோம்; அதீதமாக நம்பினோம்; அதீதமாக ஏமாந்தோம். முட்டாள்தனமாக.

நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகள்
Categories :
முனைவர் பா.ஜம்புலிங்கம்
சோழ நாட்டில் காணப்படும் புத்தரது கற்சிலைகளைத் தேடுவது மட்டுமன்றி நாகப்பட்டின புத்தரது செப்புத்திருமேனிகளை ஆவணப்படுத்தும் முயற்சியையும் என் ஆய்வின் ஒரு பகுதியாக மேற்கொண்டேன். அதற்கு அடிப்படையாக அமைந்தது டி.என். இராமச்சந்திரன் எழுதிய (The Nagapattinam and other Buddhist Bronzes in the Madras Museum, Director of Museums, Chennai, I Edition 1954, Reprint 1992) நூலாகும். இக்கட்டுரைக்கான தேடல் நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகளைப் பற்றியதாகும்.

கோழிமார் காதை
விழும் மழைத் துளிகளில் ஒன்றை
பறந்தபடியே
கொத்தி விழுங்கி
திண்ணைக்கு இறங்கி
உப்புச் சப்பற்ற பழமென்று
கொட்டக் கொட்ட முழிக்குது
கோழி.
- கார்த்திக் நேத்தா
Read more...
விழும் மழைத் துளிகளில் ஒன்றை
பறந்தபடியே
கொத்தி விழுங்கி
திண்ணைக்கு இறங்கி
உப்புச் சப்பற்ற பழமென்று
கொட்டக் கொட்ட முழிக்குது
கோழி.
- கார்த்திக் நேத்தா
6.11.10
காஷ்மீர்: நெருக்கடி அல்ல; வாய்ப்பு!
சந்தர் டி ராஜ்
நான் இந்தியர்களிடம் வெறுக்கக் கூடிய ஒரு குணம் எந்தவொரு விஷயத்திலும் கண நேரத்தில் உள்ளே நுழைந்து மாபெரும் விவாதத்தை நடத்தி ஒரு தீர்வையும் முன்வைக்கும் நம்முடைய ஆற்றல். ஒருபுறம் கோபம் வந்தாலும் மறுபுறம் எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கிறது; தனக்கு முன்பின் தெரியாத ஒரு விஷயத்தை இவ்வளவு தீர்க்கமாகப் பேச உலகில் நம்மைத் தவிர வேறு எவராலும் முடியுமா என்று!

30.10.10
23.10.10
நிதானமான வாசிப்பு- ஒரு கலை
படம்: நன்றி: ஸ்டீவ் கேப்ளின் - 'தி கார்டியன்'
பேட்ரிக் கிங்ஸ்லி
இது மிக முக்கியமான ஒரு கட்டுரை. அதுவும் நம்மைப் போன்ற இணைய வாசகர்களுக்கு.
இணையத்தில் தாவித்தாவிப் படிக்கும் பழக்கம் கிட்டத்தட்ட நம்மை முட்டாளாக்கிவிடுகிறது. இச்சூழலில் நாம் படிக்கும் வேகத்தைக் குறைப்பது சாத்தியமா?
'தி கார்டியன்' இதழில் வெளியான இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி 'தமிழ் இன்று' சற்று சுருக்கமான இந்த மொழிபெயர்ப்பை வெளியிடுகிறது.

Subscribe to:
Posts (Atom)